வெள்ளி, 16 ஜூலை, 2010

நச்சென்று ஒரு அடி! ஒரு பக்க கதை

எனது முதல் கதை!நல்லா இருந்தால் ஊக்கமளியுங்கள்,நல்லா இல்லேன்னாலும் கமெண்ட் செய்யுங்க.

நான் சுருதி பேசறேங்க,ராஜா என் சேலையை பிடித்து இழுத்து அடாவடி செய்யுறான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு எப்படியோ தப்பிச்சு வெளியில் வந்து நிக்கிறேன் என்று சுருதியிடமிருந்து போன் வந்ததவுடன் ராஜேசுக்கு ஆபிசில் வேலை ஓடவில்லை பர்மிஷன் கேட்டு அவசர அவசரமாக காரில் வீட்டுக்கு புறப்பட்டான்.

ஏன் இப்படி செய்தான் இவன் இந்த மாதிரி செய்வான் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை ஆதரவில்லாமல் என்னிடம் வந்து சேர்ந்தவனை அரவணைத்து வளர்த்ததுக்கு இப்படியா செய்வான், ஒரு நண்பனா, சகோதரனா வீட்டில் இருந்தவனுக்கு என்ன ஆனது! சுருதி வந்ததிலிருந்து அவனின் போக்கு சரியில்லை,மனதில் மிகப்பெரும் குழப்பத்தோடு மிக வேகமாக காரை செலுத்தினான்.

வீட்டின் அருகாமையில் செல்ல செல்ல பட படபடப்பு  அதிகம் ஆனது,காரை கண்டதும் அழுதுகொண்டே வந்த சுருதியின் முகம் பயத்தில் வெளிறி இருந்தது,

ஒக்கே,ஒக்கே டோன்ட் வொர்ரி சுருதி பயப்படாதே நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி சன்னல் வழியே உள்ளே பார்க்க கர்ண கொடூரமாக ராஜா நிற்பதை கண்டு, ஏய் ராஜா என்ன செய்யுற நீ ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிறே,ராஜேசின் குரல் கேட்டு சன்னல் நோக்கி வேகமாக வந்த ராஜாவை கண்டு பயந்து ராஜேசும் மிரள!

உருட்டு கட்டை ஒன்றை கையில் எடுத்து கொண்டு கதவோரம் நின்று தாழ்ப்பாளை நீக்கி கதவை தள்ளியதும் பாய்ந்து வந்த ராஜாவின் தலையில் பலம் கொண்ட மட்டும் நச்சென்று ஒரு அடி அடிக்க ரத்தம் பீறிட அலறிக்கொண்டே துடித்து உயிர் விட்டுக்கொண்டிருக்கும் ராஜாவின் நிலை கண்டு தான் ஆசையாக வளர்த்த நாயை நாமே கொள்ளும்படி ஆனதே என்று ராஜேசின் மனம் துடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக